நாட்டில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மாகாணம் முழுவதும் 195,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 19,400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக கிணறுகள் வற்றிப் போயுள்ளதுடன் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் தாம் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலானவர்கள் அன்றாட வாழ்வாதாரத் தொழிலை மேற்கொண்டு வருவதுடன் அவர்களின் பெரும்பாலானவர்கள் வரட்சியினால் தமது வருமானத்தை இழந்த நிலையில் உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தொடரும் வரட்சியினால் விவசாயத்தினை மட்டுமே தொழிலாகக் கொண்டு வாழும் தாம் விவசாயத்திற்கு நீர் இன்றி அல்லல்படுவதாக பிரதேச விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர் .
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் 5664 குடும்பங்களைச் சேர்ந்த 18,923 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் இன்று தெரிவித்துள்ளது.
வரட்சியால் சுமார் இரண்டு இலட்சம் பேர் பாதிப்பு
Reviewed by Unknown
on
September 02, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 02, 2015
Rating:


No comments: