Mountain View Mountain View

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பெயர் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பெயர் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உத்தியோகபூர்வமாக அரசியல் அமைப்புச் சபை நேற்று கூடி சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவது குறித்து ஆராய்ந்துள்ளது.

அரசியல் அமைப்புச் சபைக்கான சிவில் உறுப்பினர்களுக்கான அங்கீகாரம் அண்மையில் நாடாளுமன்றில் கிடைக்கப் பெற்றதனைத் தொடர்ந்து நேற்று பத்து பேர் அடங்கிய அரசியல் அமைப்புச் சபை கூடியிருந்தது.

ஒன்பது சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக சுமார் 250 பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள நபர்கள் பற்றி ஆராய்ந்து எந்த எந்த ஆணைக்குழுவிற்கு பொருத்தமானவர்கள் என்பதனை பட்டியலிடும் பொறுப்பு சிவில் உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பெயர் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பெயர் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன Reviewed by Unknown on September 24, 2015 Rating: 5

No comments: