இலங்கையில் தற்போது சர்வாதிகார எதிர்க்கட்சியும், ஜனநாயக ஆளுங்கட்சியும் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வர்ணித்துள்ளார்.
நிதிநிலை மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்புச் செய்திருந்த நிலையில், பிரதமரின் நாடாளுமன்ற உரையின் போது அவர் இவ்வாறு வர்ணித்திருந்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடைய முக்கிய விடயங்களைக் கூட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கின்றனர்.
ஜனவரி 8ம் திகதி ஏற்பட்ட அரசியல் புரட்சியின் பின்னர் சுதந்திரக் கட்சியின் வாக்குகளை பிச்சை கேட்டுப் பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தவர்கள் தற்போது பிச்சைக்கார புரட்சியை மேற்கொள்ள முனைவதாகவும் பிரதமர் கடுமையான வார்த்தைகளில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சர்வாதிகார ஆட்சியொன்று காணப்படுகின்றது – பிரதமர்
நாட்டில் சர்வாதிகார ஆட்சியொன்று காணப்படுகின்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிதி ஒழுங்கு சட்ட மூல விவாதம் நடாத்துவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு அவையை விட்டு சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்த போது பிரதமர் நேற்று நாடாளுமன்றில ;இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனநாயகமான ஓர் ஆளும் கட்சியும், சர்வாதிகாரமான எதிர்க்கட்சியும் இயங்கி வருகின்றன.
நாட்டின் பொருளாதாரம் பற்றி பேசும் போது கூட அதனை எதிர்க்கும் சர்வாதிகார எதிர்க்கட்சியே தற்போது இயங்கி வருகின்றது.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த முயற்சிக்கின்றது, எனினும் அதற்கு எதிர்க்கட்சி இடமளிக்கவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளினால் தெரிவான சிலர் பிச்சைக்கார கிளர்ச்சி செய்கின்றனர்.
எல்லோரும் மரங்கொத்தி பறவைகளைப் போன்று சத்தம் போட்டால் அவை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது, கட்சித் தலைவர்களுடன் பேசுவோம்.
விவாதம் நடத்த சந்தர்ப்பம் வழங்கிய போது அதிலிருந்து தப்பிச் செல்கின்றனர். நாடாளுமன்றில் விவாதம் செய்ய முடியும். நாம் இதனை பிச்சைக்கார கிளர்ச்சியாகவே அடையாளப்படுத்துகின்றோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் புண்ணியம் உண்டாக நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்ட சிலர் இன்று அநாகரீகமாக கூச்சலிடுகின்றனர் என பிரதமர் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
வாசுதேவ நாணக்கார, உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ச, தினேஸ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, பிரியானி விஜேவிக்ரம, திலும் அமுனுகம, சந்திரசிறி கஜதீர, பிரசன்ன ரணவீர, குமார வெல்கம, கனக ஹேரத், ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட சிலர் அவையை விட்டு வெளியேறிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சர்வாதிகார எதிர்க்கட்சியும், ஜனநாயக ஆளுங்கட்சியும்!- பிரதமரின் வர்ணனை
Reviewed by Unknown
on
September 24, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 24, 2015
Rating:


No comments: