Mountain View Mountain View

கத்தி விவகாரத்தால் புலி படத்திற்கு வந்த பிரச்சனை

ஏ.ஆர்.முருகதாஸின் கத்தி பட பிரச்சனை இன்னும் ஓயவேயில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் தாகபூமி என்கிற தன் கதையை கத்தி என்ற பெயரில் முருகதாஸ் திரைப்படமாக்கி விட்டார்.

இதனால் இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் தனக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரி, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2014-இல் வழக்கு தொடுத்தார்.

இவ்வழக்கு அக்டோபர் 26ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், அன்பு ராஜசேகர், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள புலி படத்தையும், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இனிமேல் இயக்கி, தயாரித்து வெளிவரவுள்ள படங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
கத்தி விவகாரத்தால் புலி படத்திற்கு வந்த பிரச்சனை கத்தி விவகாரத்தால் புலி படத்திற்கு வந்த பிரச்சனை Reviewed by Unknown on September 24, 2015 Rating: 5

No comments: