Mountain View Mountain View

சிறுமி சேயாவின் படுகொலை; அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

கொட்டதெனியாவ சிறுமி சேயா சதவ்மி கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை கண்டன கவனயீர்ப்பும், அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.








காலை பத்து மணிக்கு பாடசாலை முன்றலில் ஒன்றுகூடிய மாணவர்கள் சிறுமி சேயா சதவ்மியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதோடு கவனயீர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுப்பட்டனர்.

இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, “இதுவே இறுதியாக சம்பவமாக இருக்கட்டும், பள்ளிக் கனவுகளை சிதைக்காதே, பூவாக மலரும் முன்னே புதைகுழி அமைக்காதே, சுதந்திரமாய் சிறக்கடிக்க உரிமை கொடு எங்களுக்கு, பட்டினி என்றாலும் பாலகருக்கு பாதுக்காப்பான வாழ்வு கொடு,

சிறுவர்கள் நாம் வன்முகொடுமைகளுக்கு ஆளாவதை தவிர்த்து பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்ற நாட்டினை உருவாக்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.

இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிறுமி சேயாவின் படுகொலை; அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் கவனயீர்ப்பு போராட்டம் சிறுமி சேயாவின் படுகொலை; அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் கவனயீர்ப்பு போராட்டம் Reviewed by Unknown on September 26, 2015 Rating: 5

No comments: