Mountain View Mountain View

மட்டக்களப்பில் சுனாமியால் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் கையளிப்பு

சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கென சவூதி அரேபிய அரசின் நிதி உதவியின் கீழ் நிர்மாணக்கப்பட்ட 60 வீடுகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்பட்டன.








மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிகரம் மீள்குடியேற்ற கிராமத்தில் 6 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 60 வீடுகளும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கையளிக்கப்பட்டன.

சவுதி அரேபியா மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலை கழக பீடாதிபதி கலாநிதி அஸ்ஸெய்க் சலாஹ் சாலிம் சயீத் பாஉஸ்மான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தலா 10 இலட்சம் ரூபாய் செலவில் ஒவ்வொரு வீடும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயனாளிகளுக்கு தளபாடங்களும் இந்த நிகழ்வின்போது வழங்கப்பட்டன
மட்டக்களப்பில் சுனாமியால் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் கையளிப்பு மட்டக்களப்பில் சுனாமியால் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் கையளிப்பு Reviewed by Unknown on September 26, 2015 Rating: 5

No comments: