(இணையத்துக்காக செல்வா சிந்து)
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வெருகலம்பதி சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹோற்சவ ஆன்மீக பாதயாத்திரை நேற்று(26.09.215) சனிக்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகியது. இவ் பாதயாத்திரை ஏழு நாட்கள் பாதயாத்திரையாக பல இந்து ஆலயங்களையும் தரிசித்து, இந்து ஆலயங்களின் உற்சவங்களிலும் கலந்து கொண்டு எதிர்வரும் மாதம் அதாவது 01.10.215 வியாழக்கிழமை வெருகலம்பதியை சென்றயடையவுள்ளனர்.
இப்பாதயாத்திரை குழு நேற்று(26.09.215) சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் தேற்றாத்தீவு கொம்புச்ந்தி பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தவுடன் தேற்றாத்தீவு இந்து இளைஞர் பஜனை குழு இணைந்து பாதயத்திரையுடன் வெருகலம்பதி நோக்கி பயணிக்கின்றனர்.இவ் பாதயத்திரை பல லட்சகணக்கான அடியார் இலங்கையின் பல பாகத்தில் இருந்து கலந்து கொண்டுள்ளனர்.
வெருகல் பாதயாத்திரை குழுவில் தேற்றாத்தீவு இந்து இளைஞர் குழு இணைவு
Reviewed by Unknown
on
September 27, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 27, 2015
Rating:




No comments: