சுன்னாகம் பொலிசாருக்கும் நீதிமன்றத்திற்கும் சவால்விடும் வகையில் ரவுடிகளின் அடவாடித்தனங்கள் சுன்னாகம் பொலிஸ் பகுதியில் அமைந்துள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ரவுடிகளின் அட்டகாசம் மீண்டும் தலை தூக்கிய நிலையில் நீதிமன்றத்தினால் விசேட அதிரடிப் பொலிசாரையும் பயன்படுத்தி ரவுடிகளின் அட்டகாசத்தை நிறுத்;தும் படி பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு நீதிமன்றத்தினால் பணிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் வாள்வெட்டுக்கள் அடிபிடிகளை நிறுத்தியவர்கள் தற்போது வழிப்பறியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள்.
சுன்னாகம் பொலிசார் நீதிமன்றத்திறக்கு குற்றச் செயல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாக வெள்ளிக்கிழமை பகல் அறிக்கை சமர்ப்பித்த சில மணி நேரத்திலேயே மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்களினால் சுமார் ஏழரை லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அறுத்தெடுத்து செல்லப்பட்டுள்ளன.
சுன்னாகம் தெற்கு மூர்த்தியான் கூடல் பகுதியில் ஒரு தாலிக்கொடியுமம் சங்கிலியும் மற்றும் கந்தரோடை கற்பொக்கணைப் பகுதியில் ஒரு தாலிக்கொடி மற்றும் உடுவில் கீழிச்சந்தைப் பகுதியில் ஒரு சங்கிலியென பிற்பகல் மூன்று மணிக்கும் நாலரை மணிக்கும் இடையில் அறுத்து செல்லப்பட்டுள்ளது.
இதே போன்று வெள்ளிக்கிழமை இரவு ஏழாலைப் பகுதயில் இரண்டு ஆடுகள் திருடப்பட்டுள்ளன. இவைகள் யாவும் சுனனாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளன.
இந்தளவுக்கு ரவுடிகள் பொலிசாரின ரோந்து நடவடிக்கைகள் கண்காணிப்புக்கள் நீதிமன்றப் பணிப்புரைக்கு அமைவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தும் துணிந்து இத்தகைய நடவடிக்கைககளை மேற்க்கொள்வது பொலிசாருக்கும் நீதிமன்றத்திறகும் சாவல் விடும் ஒரு நடவடிக்கையாக பொது மக்கள் கருதுகின்றார்கள்.
யாழில் பொலிசாருக்கே சவால் விடும் ரவுடிகள்
Reviewed by Unknown
on
September 27, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 27, 2015
Rating:


No comments: