Mountain View Mountain View

வந்தாறுமூலை விஸ்ணு ஆலயத்தில் இடம்பெற்ற கிருஷ்ண ஜயந்திப் பெருவிழா

ஈழமணித்திருநாட்டில்   கிழக்கிலங்கையின் திருப்பதியாக விளங்கும் மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூதேவிசமேத ஸ்ரீமகா விஷ்ணு தேவஸ்தான வருடாந்த  ஸ்ரீ கிருஷ்ண ஜயந்திப்  பெருவிழா 05.09.2015 சனிக்கிழமை ஆலயநிர்வாகத்தின் தலைமையில் இடம்பெற்றது.










 காலை 8.00 மணிக்கு விஸ்வஷ்சேன  மகா  கணபதி வழிபாட்டுடன் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து 108 கலச விசேடதிரவிய அபிஷேகம்,வசந்த மண்டப பூஜை என்பன   இடம்பெற்றது.

மாலை 05.00 மணிக்கு கண்ணன் பஜனைக் கலை  மன்றத்தின் பஜனா வழிபாட்ட்டினை தொடர்ந்து விசேட மேள கச்சேரி,வசந்தமண்டப பூஜை,சுவாமி உள்வீதி உலா வருதல் இடம்பெற்றது.

அதன் பிற்பாடு விசேட உற்சவமான பொன் தொட்டிலில் ஆனந்த துயில் கொள்ளுதல்,வெண்ணைசாத்துதல்,திருபிரசாதம் வழங்க்கப்பட்டு பூஜை இனிதே நிறைவு பெற்றது.

இப் பூஜையில் பெருந்திரளான கிருஷ்ண  பக்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது .

தமிழின் எதிரொலி இணையத்துக்காக / மூலையூரான்....
வந்தாறுமூலை விஸ்ணு ஆலயத்தில் இடம்பெற்ற கிருஷ்ண ஜயந்திப் பெருவிழா வந்தாறுமூலை விஸ்ணு ஆலயத்தில் இடம்பெற்ற கிருஷ்ண ஜயந்திப்  பெருவிழா Reviewed by Unknown on September 07, 2015 Rating: 5

No comments: