Mountain View Mountain View

இன்றைய ராசிபலன் (06.09.2015)

இன்றைய தினம்
மன்மத வருடம் – ஆவணி 20
செப்டம்பர்
6
ஞாயிறு
ராகு காலம்
4.30 – 6.00
எம கண்டம்
12.00 – 1.30
நல்ல நேரம்
காலை 7.45-8.45 மாலை 3.15-4.15
இன்றைய ராசிபலன்
மேஷம்
மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உற வினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது முயற்சி கள் பலிதமாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: இன்றும் மாலை 6 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்ற வர்களை சார்ந்து இருக்க வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. உறவினர், நண்பர் களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
மிதுனம்
மிதுனம்: கணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்கள் வந்து போகும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். உடல் நலம் பாதிக்கும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். மாலை 6 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.
கடகம்
கடகம்: உங்களிடம் இருக்கும் சின்ன சின்ன பலவீனங் களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். சிறப்பான நாள்.
சிம்மம்
சிம்மம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கன்னி
கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை மூலம் தீர்வு காண்பீர்கள். பால்ய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத் தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.
துலாம்
துலாம்: மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: தன்னம்பிக்கை யுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவிவழியில் பக்கபலமாக இருப் பார்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்குவீர்கள். மாலை 6 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
தனுசு
தனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக் கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மகரம்
மகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். நினைத்தது நிறைவேறும் நாள்.
கும்பம்
கும்பம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
மீனம்
மீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங் கள் செய்வீர்கள். தைரியம் கூடும் நாள்.
இன்றைய ராசிபலன் (06.09.2015) இன்றைய ராசிபலன் (06.09.2015) Reviewed by Unknown on September 06, 2015 Rating: 5

No comments: