Mountain View Mountain View

பழைய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும்

பழைய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளுராட்சி மன்ற சட்டங்களின் அடிப்படையில் தொகுதிவாரி முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும், எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆளும் கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை மட்டும் பழைய முறையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய எல்லை நிர்ணய நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதுடன், இந்த நிர்ணயம் பற்றிய விபரங்கள் வர்த்தமானி ஊடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், எல்லை நிர்ணய நடவடிக்கைகள் ஒரு தலைப்பட்சமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால் எல்லை நிர்ணயப் பணிகள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கையை மேற்கொள்ள சில மாத கால அவகாசம் தேவை என்பதனால், இம்முறைத் தேர்தலை பழைய முறையில் நடாத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பழைய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் பழைய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் Reviewed by Unknown on September 13, 2015 Rating: 5

No comments: