மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் திவிநெகும வாழ்வின் எழுர்ச்சி சந்தைப்படுத்தும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.
கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் இடம்பெற்ற சந்தைப்படுத்தல் நிகழ்வு மண்முனை தென்மெற்கு பிரதேச செயலர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த சந்தைப்படுத்தலில் கிராம மட்டங்களில் சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்தியிருந்தனர்.
கிராம மட்டங்களில் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவு பண்டங்கள் மற்றும் அரிய வகை உற்பத்திகளையும் இதன்போது கொள்வனவுசெய்ய முடிந்ததாகவும் பெருந்தொகையான மக்கள் கொள்வனவில் ஈடுபட்டிருந்தமையினையும் அவதானிக்க முடிந்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானங்களை ஈட்டும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திவிநெகும திணைக்களத்தினுாடாக கடனுதவித்திட்டங்கள் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்டு அதனுாடாக சுயதொழிலை ஆரம்பித்து வருமானத்தை அதிகரிக்கச்செய்யவதே திவிநெகும திணைக்களத்தின் நோக்கமாகும்.
மட்டக்களப்பு மண்முனையில் திவிநெகும திட்டத்தினுாடாக சந்தைப்படுத்தல் நிகழ்வு
Reviewed by Unknown
on
September 27, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 27, 2015
Rating:





No comments: