வவுனியா – பூவரசங்குளம், இரணைஇலுப்பைக்குளம் வீதியில் அமைந்துள்ள இரண்டாம் செங்கற்படைக்கிராமத்தில் உள்ள செங்கற்படை திருக்குமரன் வித்தியாலயம் மிக நீண்டகாலமாக ஆசிரியர் வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வந்தது.
தரம் 1 – 5 வரையான வகுப்புக்களைக்கொண்ட இப்பாடசாலையில் அதிபர் உட்பட இரு ஆசிரியர்களே கடமையாற்றி வந்தனர்.
நீண்டகாலமாக குறித்த ஆசிரியர் வளம் நிரப்பப்படாமையினால் கடந்த தவணை ஆரம்பித்திலிருந்து குறித்த பாடசாலை மூடப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியிலுள்ள உள்ள மாணவர்கள் 05 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள புதுக்குளம் வித்தியாலயத்திற்கு சென்று கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து வசதிகளற்ற நிலையில் கூடுதலான மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகிய நிலை காணப்படுவதாகவும் குறித்த பாடசாலைக்கு ஆசிய ஆளணி வளங்களை பூர்த்தி செய்து மீள ஆரம்பிக்குமாறு இப்பகுதி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை இதன் அருகிலுள்ள கோவில் மோட்டை தமிழ் வித்தியாலயமும் போதிய ஆசியவளம் இன்மையால் இப்பாடசாலையும் மூடப்படும் நிலை காணப்படுவதாகவும் பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஆசிரிய வளமின்றி மூடப்பட்டது செங்கற்படை திருக்குமரன் வித்தியாலயம்
Reviewed by Unknown
on
September 22, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 22, 2015
Rating:


No comments: