கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் ஏற முயன்றபோது தவறிவிழுந்து விபத்துக்குள்ளானதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி புறப்பட இருந்த புகையிரதத்தில் ஏற முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 25 வயதான ராகமை பிரதேசத்தை சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
புகையிரதத்தில் ஏற முயன்று தவறி வீழ்ந்த யுவதி பலி; கோட்டையில் பரிதாபம்
Reviewed by Unknown
on
September 22, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 22, 2015
Rating:


No comments: