Mountain View Mountain View

அறுபது வயது பெண்ணாக நடிக்கும் வேதிகா

பரதேசி’, ‘காவியத்தலைவன்’ ஆகிய படங்களில் நடித்த வேதிகா, தற்போது பிரபுதேவா தயாரிக்க இருக்கும் ‘வினோதன்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தில் வேதிகா, மறைந்த பிரபல நடிகர் ஐசரி வேலனின் பேரன் வருணுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை விக்டர் ஜெயராஜ் இயக்கவுள்ளார்.
வருணுக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளை தேடி வந்தனர். கடைசியாக வேதிகாவை தேர்வு செய்தனர்.
புது படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் பிரபுதேவா தயாரிப்பில் நடிப்பதன் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் வேதிகா, இப்படத்தில் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறாராம். ஒன்று பள்ளி மாணவியாகவும் மற்றொன்று 60 வயது பெண்ணாகவும் நடிக்க இருக்கிறாராம்.
இதற்கு முன் ‘இந்தியன்’ படத்தில் நடிகை சுகன்யா இளம் வயது பெண்ணாகவும், 60 வயது பெண்ணாகவும் நடித்திருந்தார். இதில் சுகன்யாவின் நடிப்பு பேசப்பட்டது. இதுபோன்று வேதிகா நடிக்கவுள்ள கதாபாத்திரமும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகினறது.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அறுபது வயது பெண்ணாக நடிக்கும் வேதிகா அறுபது வயது பெண்ணாக நடிக்கும் வேதிகா Reviewed by Unknown on September 05, 2015 Rating: 5

No comments: