Mountain View Mountain View

திருகோணமலையில் கடற்படை பேருந்து விபத்து! 13 பேர் படுகாயம்

திருகோணமலையில் கடற்படை பேருந்து ஒன்றுடன் லொறியொன்று மோதிய விபத்தில் 13 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


திருகோணமலை- புத்தளம் வீதியின் திரியாய் சந்தியில் நேற்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


காயமடைந்தவர்களில் 12 பேர் கடற்படையினர் என்றும் சிவிலியன் ஒருவரும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களை உடனடியாக மீட்பதில் பொதுமக்களும் பொலிசாருக்கு உதவியுள்ளனர்.

மஹதிவுல்வெவ கிராமிய வைத்தியசாலையில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்கள் அனைவரும் திருகோணமலை போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் கடற்படை பேருந்து விபத்து! 13 பேர் படுகாயம் திருகோணமலையில் கடற்படை பேருந்து விபத்து! 13 பேர் படுகாயம் Reviewed by Unknown on October 19, 2015 Rating: 5

No comments: