Mountain View Mountain View

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 15 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டம்

அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 15ஆவது நாளாகவும் கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக தொடர்கின்றது. 




கிழக்குமாகாண சபையினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள் மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற காரணத்தால் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாகவும்,

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்ற தமிழ்ப் பட்டதாரிகள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டதாகவும்,

கடந்த 2011 – 2014 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில் பட்டம்பெற்ற பட்டதாரிகளுக்கு இதுவரை காலமும் எந்த வித நியமனங்களும் வழங்கப்படவில்லை என்பதனையும் கண்டித்து இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மொத்தமாக 350 தமிழ் பட்டதாரிகள் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் 120க்கும் அதிகமான பட்டதாரிகள் இவ் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதோடு இன்று பொது மக்கள் சந்திப்பு தினம் ஆகையால் இன்றைய தினம் தமது போராட்டத்திற்கான முடிவு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்தும் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 15 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டம் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 15 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டம் Reviewed by Unknown on October 14, 2015 Rating: 5

No comments: