Mountain View Mountain View

காணாமல் போனோர் தொடர்பான விசாரணை நவம்பர் 18 முதல் ஆரம்பம்!

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தமது பணிகளை அடுத்த மாதம் முதல் மீள ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி நவம்பர் 18ம் திகதி யாழ்ப்பாணத்தில் மக்கள் அமர்வு இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்குத் தான் உத்தரவிட்டுள்ளார் என்று மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் பரணகம தெரிவித்தார்.

காணாமல் போனோர் தொடர்பில் மக்களிடம் சாட்சியங்கள், தகவல்கள் திரட்டும் பணிகள் கடந்த சில வாரங்களாக இடம்பெறவில்லை.

பொதுத்தேர்தல் உட்பட மேலும் சில விடயங்களால் இவை பிற்போடப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே நடவடிக்கைகள் மீள முன்னெடுக்கப்படவுள்ளன.

காணாமல் போனோர் பணியகம் அமைப்புக்குப் பின்னர் பரணகம குழு கலைப்பு!

காணாமல் போனோர் தொடர்பான பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், பரணகம ஆணைக்குழு கலைக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது. மேற்படி ஆணைக் குழுக்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள், குறித்த பணியகத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்படும் என்று அறியமுடிகின்றது.

உள்ளக விசாரணைப் பொறிமுறைக்காக அரசு 4 நிறுவனங்களை அமைக்கவுள்ளது. அவற்றில் காணாமல்போனோர் தொடர்பான விசாரணைப் பணியகமும் அடங்குகின்றது. இந்தப் பணியகம் அடுத்தவருடம் ஜனவரிக்குள் நிறுவப்படும் என்று அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் படையினருக்கு எதிராக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை முன்வைத்தனர். அவற்றில் கணிசமானளவு முறைப்பாடுகள் பற்றி இன்னும் விசாரணைகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போர்க்காலத்தில் வடக்கு,கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மஹிந்த ஆட்சியின்போது பரணகம குழு அமைக்கப்பட்டது. காலப்போக்கில், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள் பற்றியும் விசாரணைணை நடத்தும் வகையில் அதன் விடயப்பரப்பு விஸ்தரிக்கப்பட்டது.

இதன்படி போர்க்குற்ற விசாரணையை பரணகம குழு முடிவுக்குக் கொண்டுவந்து, அது பற்றிய விசாரணை அறிக்கையை கடந்த ஓகஸ்டில் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தது. இந்த அறிக்கையே தற்போது நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் இன்றும் முடிவடையவில்லை
காணாமல் போனோர் தொடர்பான விசாரணை நவம்பர் 18 முதல் ஆரம்பம்! காணாமல் போனோர் தொடர்பான விசாரணை நவம்பர் 18 முதல் ஆரம்பம்! Reviewed by Unknown on October 27, 2015 Rating: 5

No comments: