Mountain View Mountain View

சித்தாண்டி பிரதேசத்தில் வெள்ள அபாயம்!

(Mayuran.asy)மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட பல பகுதிகளுக்குள் வெள்ள நீர் அபாயம் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.










சித்தாண்டி சந்தனமடு ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக சித்தாண்டி கிராமத்தின் பல கரையோர குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் பெருக்கெடுத்து வருவதனால் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது.

சித்தாண்டி, முறக்கொட்டன்சேனை, வந்தாறுமூலை, சந்திவெளி போன்ற கரையோர கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

குடியிருப்புக்களுக்குள் நடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் வெள்ள நீரினால் மூழ்கிள்ளதுடன் ஆலயங்களும் நீரில் மூழ்கியுள்ளது.

சித்தாண்டி சந்தனமடு ஆறு பெருக்கெடுத்தமையினால் ஈரளக்குளம் மற்றும் வேரம், பெருமாவெளி, இலுக்குப்பொத்தானை போன்ற பகுதிகளுக்கு செல்லுத் தரைவழிப்பாதை தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து மழை பெய்யுமாயின் சித்தாண்டி கிராமம் இன்று இரவுக்குள் பல பகுதிகள் வெள்ள நீரினால் மூழ்கும் அபாயம் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக மாவட்டத்தின் பல கரையோரப்பகுதிகள் மழை நீரினாலும் வெள்ள நீரினாலும் மூழ்கிள்ளமை குறிப்பிடத்தக்கது
சித்தாண்டி பிரதேசத்தில் வெள்ள அபாயம்! சித்தாண்டி பிரதேசத்தில் வெள்ள அபாயம்! Reviewed by Unknown on October 27, 2015 Rating: 5

No comments: