கொட்டதெனியாவ சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் இதுவரை 40 DNA பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலை இடம்பெற்ற இடத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உயிரியல் ஆதாரங்கள், சேயாவின் உயிரியல் ஆதாரங்கள், கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உயிரியல் மாதிரிகள் அடங்கலாக 40 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த பரிசோதனைகள் நான்கு சந்தேக நபர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொட்டதெனியாவ பகுதியைச் சேர்ந்த 4 வயதான சேயா என்ற சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொட்டதெனியாவ சிறுமி கொலை தொடர்பில் 40 DNA பரிசோதனைகள்
Reviewed by Unknown
on
October 11, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 11, 2015
Rating:


No comments: