Mountain View Mountain View

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நிலவும் சீரற்ற வானிலையினால் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை,நுவரெலியா,கேகாலை,கண்டி,இரத்தினபுரி,களுத்துறை,மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிற்கு வௌ்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின்,மண்சரிவு ஆய்வு மற்றும் அபாய முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஆர் எம் எஸ் பண்டார கூறினார்.
இந்த அபாய எச்சரிக்க இன்று (18) இரவு 8.30 வரை நடைமுறையிலிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
தற்போது குறித்த மாவட்டங்களில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கற்பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாவதாகவும் ஆர் எம் எஸ் பண்டார குறிப்பிட்டார்.
அத்துடன் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் கற்பாறைகள் மற்றும் மண் மேடுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு 8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு Reviewed by Unknown on October 18, 2015 Rating: 5

No comments: