கடந்த சில தினங்களாக நாடுபூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் இன்றைய தினம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாகவே மேற்படி உண்ணாவிரதத்தை அரசியல் கைதிகள் நிறைவக்கு கொண்டு வந்துள்ளதாக கூட்மைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறினேசன் தெரிவித்தார்.
இன்று மதியம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி, சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து காத்திரமான முடிவை எதிர்வரும் மாதம் 7ம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளதாக கூறியதை தொடர்ந்து சிறைக்கைதிகள் அனைவரும் குளிர்பானம் அருந்தி தங்களது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதுடன் இன்றைய தினம் மட்டக்களப்பு அமிர்தகழியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரினால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதத்தையும் நிறைவுக்கு கொண்டுவந்துள்ளனர்.
மட்டக்களப்பு அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் நிறைவு
Reviewed by Unknown
on
October 18, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 18, 2015
Rating:


No comments: