Mountain View Mountain View

சம்பூரில் புள்ளி அடிப்படையில் நிராகரிக்கப்படும் இந்திய வீட்டுத் திட்டம்

திருகோணமலை – சம்பூரில் 59 வீதமான மக்களிற்கு இந்திய வீட்டு திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


வீட்டு திட்டங்களை பெற்றுக்கொள்வதற்கு தகுதிகள் மற்றும் புள்ளியடிப்படையில் இந்த வீட்டு திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் சம்பூர் வருகையை 20 ஏக்கரில் 57 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ள அதேவேளை மொத்தமாக 335 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களிற்கு முன்னுரிமை அடிப்படையில் இந்திய வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.

2008 மட்டும் 2009 ஆம் ஆண்டு கால மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற 5 இலட்சத்து 50 ஆயரம் ரூபா போதுமானதாக இல்லை எனவும் அதனை 7 இலட்சமாக அதிகரிப்பதற்கு இந்திய அரசு முன்வரவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பூரில் புள்ளி அடிப்படையில் நிராகரிக்கப்படும் இந்திய வீட்டுத் திட்டம் சம்பூரில் புள்ளி அடிப்படையில் நிராகரிக்கப்படும் இந்திய வீட்டுத் திட்டம் Reviewed by Unknown on October 11, 2015 Rating: 5

No comments: