போர் நிறைவடைந்த பின்னரான கடந்த ஆறு ஆண்டுகாலத்தில் மக்கள் எதிர்நோக்கிய எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லையெனவும் இதனால் தேசிய மீனவர் பேரவையுடன் இணைந்து போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் மாவட்ட மீனவர் பேரவைத் தலைவர் கே.இஸ்ஸதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் பிரச்சினைகளை ஆராயும் கூட்டம் ஒன்று மாவட்ட மீனவர் பேரவையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அங்கு பிரதான உரையாற்றிய அவர் மீனவர்களின் பிரச்சினைகள் உட்பட மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகளை தீர்க்க எவரும் முன்வரவில்லை என்று குற்றம் சுமத்தினார்.
இந்த கலந்துரையாடலில் மீனவ சங்க பிரதிநிதிகள், மற்றும் பொது அமைப்புகள், வர்த்தகர்கள் என பலரும் கலந்துகொண்டு கிழக்கு மாகாணத்தில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் உடனடியாக தேவைப்படும் விடயங்கள் குறித்து ஆராய்ந்தனர்.
தேர்தல்களின்போது மக்களின் வாக்குகளை பெறும் பிரதிநிதிகள், வெற்றிபெற்றதும் தம்மை வந்து சந்திப்பதில்லை என்றும் மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் அரச அதிகாரிகளும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முன் வருவதில்லை எனவும் மாவட்ட மீனவர் பேரவைத் தலைவர் கே.இஸ்ஸதீன் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் மீனவர்களும் விவசாயிகளும் அன்றாடம் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் ஆனால் மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர் கவனம் செலுத்துவதில்லை என்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் குற்றம் சுமத்தினர்.
இந்த நிழக்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அன்டனி ஜேசுதாசன் ஆகியோரும் உரையாற்றினர்
கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள்: கலந்துரையாடலில் குற்றச்சாட்டு
Reviewed by Unknown
on
October 11, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 11, 2015
Rating:


No comments: