Mountain View Mountain View

காட்டு யானை தாக்கி கணவன், மனைவி பலி ; பட்டிப்பளையில் சம்பவம்

மட்டக்களப்பு - பட்டிப்பளைப் பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட தாந்தாமலைப் பகுதின் நெல்லிக்காடு பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குலுக்கிலக்காகி கணவன் மனைவி ஆகிய இருவரும் பரிதாபகரமாக உரியிழந்துள்ளனர்.




இந்தச் சம்பவம்  செவ்வாய்கிழமை அதிகாலை  இடம்பெற்றுள்ளதாக பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன் மன்றும் மனைவி ஆகிய இருவரும் ஓலைக் குடிசையில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையிலேயே இவர்கள் குடியிருந்த அக்குடிசையை முற்றாக உடைத்து சேதப்படுத்திவிட்டு, கணவன் மற்றும் மனைவி ஆகி இருவரையும் அடித்துவிட்டு காட்டுயானை சென்றுள்ளது.

தாக்குதலின் பின் சம்பவ இடத்திலேயே மேற்படி இருவரும் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதில் டேவிற் மோகனதாஸ் வயது 30, தம்பிராசா சுயமலர் வயது 17 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது  தொடர்பில் பட்டிப்பளைப் பொலிசார் விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டு யானை தாக்கி கணவன், மனைவி பலி ; பட்டிப்பளையில் சம்பவம் காட்டு யானை தாக்கி கணவன், மனைவி பலி ; பட்டிப்பளையில் சம்பவம் Reviewed by Unknown on October 21, 2015 Rating: 5

No comments: