Mountain View Mountain View

கிழக்கு பல்கலை வந்தாறுமூலை வளாகத்தில் மாணவக் குழுக்களிடையே மோதல்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இரு மாணவக் குழுக்களுக்கிடையில்  செவ்வாய்க்கிழமை கைகலப்பு இடம்பெற்றுள்ளது.


இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதில்பதிவாளர் ஏ.பகீரதன் அறிவித்துள்ளார்.

கலைப்பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் இந்தக் கைகலப்பு இடம்பெற்றது. 

இதன்போது பாதிக்கப்பட்ட 06 மாணவிகள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பல்கலைக்கழக விரிவுரைகள் மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலை வந்தாறுமூலை வளாகத்தில் மாணவக் குழுக்களிடையே மோதல் கிழக்கு பல்கலை வந்தாறுமூலை வளாகத்தில் மாணவக் குழுக்களிடையே மோதல் Reviewed by Unknown on October 21, 2015 Rating: 5

No comments: