மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றிஸ்வி நகர் கடற்கரையோரத்தை அண்டிய வெள்ள நீரில் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலத்தை கண்ட சிலர், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கடந்த திங்கட்கிழமை காணாமல் போன மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் வசிக்கும் 79 வயதான எம்.பாத்துமுத்து என்பவரின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த பெண் காணாமல் போனமை தொடர்பில் ஏற்கனவே காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
காத்தான்குடியில் வெள்ள நீரில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு !
Reviewed by Unknown
on
October 29, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 29, 2015
Rating:




No comments: