கட்டிட திறப்பு விழா ஒன்றிற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் வருகையை கண்டித்து இன்று வியாழக்கிழமை காலை காத்தான்குடி அந்நாசர் வித்தியாலயத்திற்கு இனந்தெரியாத நபர்கள் சேதம் விளைவித்துள்ளனர்.
இதனால் பாடசாலைக் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பபட்டுள்ளதுடன் முதலமைச்சரின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கல் முற்றாக அகற்றப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு முன்னாள் அமைக்கப்பட்டிருந்த பதாதைகளும் அகற்றப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
முன்னாள் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட மஹிந்தோதைய ஆய்வு கூடக்கட்டிடம் தொழில்நுட்ப ஆய்வு கூடமாக பெயர் மாற்றப்பட்டு இன்று முதலமைச்சரினால் திறந்து வைக்கப்படவிருந்தது.
ஏற்கனவே இக்கட்டிடத்தை முன்னாள் அரசாங்க காலத்தில் பிரதியமைச்சர் எம்.எல்ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இக்கட்டிட திறப்பு விழாவிற்கு வருகைதரும் முதலமைச்சரின் நடவடிக்கையை கண்டித்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் சொகோ பொலிஸ் பிரிவினர் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் உட்பட அதிகாரிகள் விசாரணைகளை நடாத்தினர்.
விழா நடைபெறவிருந்த மண்டபத்தின் முன்கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் கட்டிடங்களுக்கு தார் வீசி சேதப்படுத்தப்படடுள்ளது. நிவைவுக்கல் மற்றும் பதாதைகளும் அகற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முதலமைச்சர் திறந்துவைக்கவிருந்த காத்தான்குடி பாடசாலை நினைவுக்கல் இனந்தெரியாதோரால் சேதம்!
Reviewed by Unknown
on
October 29, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 29, 2015
Rating:










No comments: