வாழைச்சேனை - கல்குடா பொலிஸ் பிரிவில் நேற்று வியாழக்கிழமை மாலை வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை - கோரளைப்பற்று பிரதேச சபை ஊழியர்கள் வெள்ளம் காரணமாக தேங்கி நிற்கும் வெள்ள நீரினை வழிந்தோடச் செய்யும் முகமாக பெக்கோ இயந்திரத்தின் துணையுடன் வடிகான் அமைக்கும் பணியினை கல்குடாவில் முன்னெடுத்தனர்.
இதன்போது மர்ம பொருள் ஒன்று தென்படுவதையடுத்து அருகிலுள்ள கல்குடாப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர் பொலிஸார் பின்னர் குறித்த மர்மப் பொருள் ஆட்லறி 122மோட்டார் குண்டு என அடையாளங் கண்டனர்.
பின்னர் குண்டு செயழிக்கச்செய்யும் தொப்பிக்கலை இராணுவப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு அவற்றினை செயழிக்கச்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது பிரதேச சபையினால் முயுனெடுக்கப்பட்ட குறித்த வேலைத் திட்டமானது தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு கருதி பொலிஸாரின் பதிலை எதிர்பார்த்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேசசபையின் செயலாளர் எஸ்.எம்;.சிஹாப்தீன் தெரிவித்துள்ளார்.
கல்குடா பொலிஸ் பிரிவில் வெடி குண்டு கண்டுபிடிப்பு
Reviewed by Unknown
on
October 30, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 30, 2015
Rating:



No comments: