மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேசத்தில் காட்டு யானைகள் தங்கி நிற்கும் பற்றைக் காடுகளை அழிக்கும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் இதன் ஆரம்ப பணிகள் குறித்த பிரதேசத்தின் விவேகானந்தபுரம் கிராமத்தில் ஆரம்பமானது.
போரதீவுப்பற்று பிரதேச செயலகம், போரதீவுப்பற்று பிரதேச சபை, வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வன விலங்கு இலாகா, மட்டக்களப்பு கச்சேரி, அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மற்றும் இராணுவத்தினர் போன்ற அரச அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
இந்த பிரதேசத்தில் பொதுக்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பிலுள்ள பற்றைக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
காட்டு யானைகளைப் பிடித்து சரணாயலத்தில் விடுவதற்காக அனுரதபுரத்திலிருந்து விசேட குழுவென்றும் நேற்று செவ்வாய் கிழமை மாலை இந்த பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தெரிவித்தார்.
பிரதேச மக்கள் எதிர் கொள்ளும் காட்டுயானைகளின் தொல்லைகளுக்கு மிகவிரைவில் முடிவு எட்டப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பிரதேசத்தில் காட்டுயானைகள்: பற்றைக் காடுகளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்
Reviewed by Unknown
on
October 08, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 08, 2015
Rating:





No comments: