மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் முத்திரையிடப்படாத நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளைக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 40 வர்த்தக நிலையங்கள்வியாழக்கிழமை காலை சுற்றிவளைக்கப்பட்டதாகவும் இந்த நடவடிக்கையின் போது 4 வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்தாகவும் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.
காத்தான்குடி பொதுச்சந்தை மற்றும் ஆரையம்பதி நகரங்களில் இவ்வாறு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொதுச்சந்தையில் முத்திரையிடப்படாத தராசுகளைக் கொண்டு வியாபாரம் செய்த இரு மீன்வியாபாரிகளும் ஆரையம்பதியில் பழக்கடை மற்றும் ஆயுள்வேத மருந்துக்கடை ஆகியவற்றின் இருவர்த்தகர்களுமாக நான்கு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த நான்கு வர்த்தகர்கள் மீதும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
சட்டவிரோத நிறுத்தற்கருவிகளைப் பயன்படுத்திய வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு
Reviewed by Unknown
on
October 23, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 23, 2015
Rating:




No comments: