அம்பாறை- தமண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலுக்குச்சேனை பிரதேசத்தில் கரும்பு சருகுகளுக்கு தீ வைத்து எரிக்க முற்பட்ட விவசாயி ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக தமண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள 2 அரை ஏக்கர் கரும்பு செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், கரும்பு வெட்டி எடுத்த பின்னர் அதன் சருகுகளை சம்பவதினமான நேற்று நண்பகல் தீவைத்து எரிக்க முற்பட்ட போதே சருகுகளுக்கு வைக்கப்பட்ட தீ பலமாக வீசப்பட்ட காற்றின் காரணமாக அதிவேகமாக பரவியதையடுத்து அப்பகுதியில் இருந்து வெளியேற முடியாத நிலையில், தீ அவர் மேல்பற்றியதையடுத்த அவர் தீயில் எரிந்து கருகி உயிரிழந்தார்
வரிப்பொத்தான்சேனை 8 ஆம் கட்டையைச் சேர்ந்த 72 வயதுடைய விவசாயியான கே.டி.இக்கினேஸ் பிரான்சிஸ் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவஇடத்திற்கு சென்ற பொலிஸாரும் அப்பகுதி பொதுமக்களும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து தீயில் எரிந்தவரின் உடலை மீட்டெடுத்து அம்பாறை ஆதாரவைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாணைகளை தமண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தீயில் எரிந்து பரிதாபமாக உயிரிழந்த விவசாயி
Reviewed by Unknown
on
October 23, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 23, 2015
Rating:


No comments: