Mountain View Mountain View

மட்டு சிறைக் கைதிகள் நடாத்திய போராட்டத்தில் அரசியல் கைதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை !


(Sivam)கொலை, பாலியல் வல்லுறவு, சிறுவர் துஸ்பிரயோகம், கப்பம் பெறல் என்பவற்றில் குற்றஞ்சாட்டப்பட்ட 8 சிறைக் கைதிகள்  வெள்ளிக்கிழமை (30) சிறைச்சாலை மட்டக்களப்பு சிறைச்சாலை கூரையின்மேல் ஏறி நடாத்திய போராட்டம் பிசிபிசித்துப்போனது.




தாங்கள் சுதந்திரமாக உள்ளே இருக்கமுடியாது, தாங்கள் தாக்கப்டுவதாகக் கூறியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்பு முடிவுக்கு வந்தது.


இதுபற்றி சிறச்சாலை அதிகாரிகளிடம் கேட்டபோது தற்போது சிறையினுள் கையடக்கத்தொலைபேசி, போதைப் பொருட்கள் என்பன முற்றாக தடை செய்யப்பட்டதன் காரணமாகவே குறித்த குற்றஞசாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட 8 கைதிகள் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிவித்தனர்.


இப்போராட்டத்தில் அரசியல் கைதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்படத்தக்கது.




மட்டு சிறைக் கைதிகள் நடாத்திய போராட்டத்தில் அரசியல் கைதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை ! மட்டு சிறைக் கைதிகள் நடாத்திய போராட்டத்தில்  அரசியல் கைதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை ! Reviewed by Unknown on October 31, 2015 Rating: 5

No comments: