மட்டக்களப்பு - காங்கேயனோடையில் ஒஸ்க்பாம் நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டுவரும் கைத்தறி நெசவு நிலையத்தினைப் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பார்வையிட்டுள்ளார்.
மட்டக்களப்புக்கு வியஜம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அந்நாட்டு அரசாங்கத்தின் உதவியில் நடைபெற்றுவரும் திட்டங்களைப் பார்வையிட்டுள்ளார்.
நெசவு நிலையத்தின் தேவைகள் குறித்தும் அவர் அவர் கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் இயங்கிவரும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கும் மையங்களின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மோடி, அவுஸ்திரேலியாவின் இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான கவுன்சிலர் சார்ளட் பிளன்டல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பதற்காகப் பணியாற்றும் பெண்கள் அரங்கம், சூரியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம், பாலியல் வன்முறைகளைக் குறைப்பதற்கான வலையமைப்பு, கொய்னோனினா பெண்கள் காப்பகம், பாலியல் அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பதற்கான செயலணி உள்ளிட்டவைகளின் பிரதிநிதிகளும், வைத்திய அதிகாரிகளும், இந்த சந்திப்பில் கலந்து கொண்டடுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைத்தல், அதனால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைத்தல், பெண்களின் எதிர்பார்ப்புகள், எதிர்காலச் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும், 2009ஆம் ஆண்டு வாழைச்சேனை வைத்தியசாலையிலும், 2011ஆம் ஆண்டு செங்கலடி வைத்தியசாலையிலும், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் 2014ஆம் ஆண்டும் 2015ஆம் ஆண்டு காத்தான்குடியிலும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கும் மையங்கள் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கைத்தறி நெசவு நிலையத்தை பார்வையிட்டார் : அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
Reviewed by Unknown
on
October 31, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 31, 2015
Rating:




No comments: