கடந்த சில நாட்களாக வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்துவந்த யானையை போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனை கம்பி ஆறு பிரதேசத்தில் வைத்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று சனிக்கிழமை காலை பிடித்துள்ளனர்.
கடந்த 3 நாட்களாக இந்த பிரதேசத்தில் தங்கி இருந்த அதிகாரிகள் மேற் கொண்ட நடவடிக்கையின் பின்பே இன்று காலை காட்டு யானை பிடிக்கப்பட்டது.
குறித்த யானையே போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கிராம வாசிகள் பலரை கொன்றதுடன், வீடுகளையும் பயிர்களையும் அழித்து அச்சுறுத்தி வந்ததாக தெரியவருகின்றது.
கிழக்கு மாகாண வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மிருக வைத்தியர் நிகால் புஸ்பகுமார தலைமையிலான விசேட வைத்தியர்குழுவினர் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள 18 அதிகாரிகள், மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த யானை அகப்பட்டது.
யானை மருத்துவ சிகிச்சைகளின் பின்பு ஹொறவப் பொத்தானை யானைகள் சரணாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த 5 ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் முன்பாக யானைகளின் அட்காசம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு 15 கிராமத்தை சேர்ந்த மக்கள் வீதி மறியல் போராட்டம் ஈடுபட்டிருந்தனர்.
அரசாங்க அதிபரின் 3 தீர்வு அடங்கிய வாக்குறுதியை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேசத்தில் மக்களையும், சொத்துக்களையும் தாக்கிய அழித்து வந்த தனியன் காட்டு யானை ஒன்று பிடிக்கப்பட்டு ஹபரணையிலுள்ள யானைகள் சரணாலயத்தில் விடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
வெல்லாவெளி பிரதேச செயலகத்திலுள்ள காட்டு யானைகள் ஹொறவப் பொத்தானை சரணாலயத்தில்
Reviewed by Unknown
on
October 11, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 11, 2015
Rating:




No comments: