Mountain View Mountain View

திருமலை கடற்பகுதியில் புதிதாக 11 இராணுவ முகாம்கள்: மீனவர்கள் பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுப்பதற்காக பதினொரு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.



மீனவர்களின் இந்த முறைப்பாடு தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.மொகமட் தமிழ் முஸ்லிம் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளை குழப்பும் நோக்கில் படையினர் திட்டமிட்டுச் செயற்படுவதாக குற்றம் சுமத்தினார்.

2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் 11 இராணுவ முகாம்கள் திருகோணமலை கடற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் முஸ்லிம் மீனவர்களை அச்சுறுத்தும் நோக்கில் அந்த படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது திருகோணமலை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக எடுத்துக் கூறியதாகவும் ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் மீன்பிடி கட்றறொழில் அமைச்சருடன் பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை பிரதேசங்களைச் சோந்த சிங்கள மீனவர்கள் திருகோணமலை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுவதாகவும் இதனால் மாவட்டத்தில் உள்ள தமிழ் முஸ்லிம் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் மொகமட் தெரிவித்தார்.

சிங்கள மீனவர்கள் திருகோணமலை கடற்பகுதியை ஆக்கிரமித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட படையினர் ஒத்துழைப்பதாகவும் தமிழ் முஸ்லிம் மீனவர்களை படையினர் அச்சுறுத்துவதாகவும் மொகமட் குற்றம் சுமத்தினார்.

இதேவேளை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் சிங்களவர்களாக இருப்பதால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் முறைப்பாடு செய்தாலும் அது கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்று மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கைகளில் இடையூறாக இருக்கும் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடமும் முறையிடப்பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார். 
திருமலை கடற்பகுதியில் புதிதாக 11 இராணுவ முகாம்கள்: மீனவர்கள் பாதிப்பு திருமலை கடற்பகுதியில் புதிதாக 11 இராணுவ முகாம்கள்: மீனவர்கள் பாதிப்பு Reviewed by Unknown on October 11, 2015 Rating: 5

No comments: