Mountain View Mountain View

விபத்துக்குள்ளான வான் மற்றும் பஸ் : மயிரிழையில் தப்பிய பயணிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.





இன்று காலை மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியில் உள்ள வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற வீதி விபத்தில் வான் ஒன்று தடம்புரண்டுள்ளது.

குறித்த விபத்தில் எந்தவித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் நேற்றைய தினம் (27.10.2015)மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டி வெலிக்கந்தை காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஏறாவூர்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 29 பேர் மயிரிழையில் உயிர்தப்பினர்.

அடைமழை காரணமாக வீதி தெளிவாகத் தெரியாமையினால் வீதியில் இருந்து விலகிய பஸ்வண்டி காட்டுப்பகுதிக்குள் சென்றதாகவும் சாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக நீடித்துவரும் அடைமழை காரணமாக வீதிகள் சேதமடைந்துள்ளதனால் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக கூறும் பொலிசார் வாகனசாரதிகள் வாகனங்களை மெதுவாக செலுத்துவதன் ஊடாக இவ்வாறான விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விபத்துக்குள்ளான வான் மற்றும் பஸ் : மயிரிழையில் தப்பிய பயணிகள்  விபத்துக்குள்ளான வான் மற்றும் பஸ் : மயிரிழையில் தப்பிய பயணிகள் Reviewed by Unknown on October 28, 2015 Rating: 5

No comments: