ஹெல்பொட தோட்டத்தில் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
கொத்மலை, கட்டுக்கித்துலை, ஹெல்பொட தோட்டத்தில் இன்று முச்சக்கரவண்டி ஒன்றில் பாடசாலை சிறுமி ஒருவரின் பாடசாலை சீர் உடை, உள்ளாடை, புத்தகப்பை. சப்பாத்துகளுடன் ஒருவர் இருந்ததைக் கண்டு அயலவர்கள் அந்த நபரை பிடித்து சிறுமி எங்கே என்று வினவிய போது சிறுமி தொடர்பான தகவலை சந்தேக நபர் வழங்காததினால் மக்கள் அச்ச நிலை அடைந்தனர்.
இந்நிலையில் பிடிக்கப்பட இளைஞரை பொலிஸாரிடம் கையளித்தனர்.
அச்சந்தர்பத்தில் சந்தேக நபரை பொலிஸார் குறித்த இடத்திலிருந்து அழைத்துச் செல்ல முட்பட்ட போது அதற்கு மக்கள் சம்மதிக்காதினால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் குழப்ப நிலை தோன்றியது.
பின் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய நிர்வாகப் பொலிஸ் பொருப்பதிகாரி சம்பத் விக்ரமரத்னவின் முயற்சியால் சந்தேக நபர் குறித்த இடத்திலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துக் செல்லப்பட்டார்.
சிறுமியை தேடும் பணியில் தோட்ட மக்களும் கிராம மக்களும் ஈடுப்பட்ட போதும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் மக்கள் அச்சத்தில் காணப்படுவதுடன் மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஹெயரத் தலைமையில் நிர்வாக பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பத் விக்ரமரத்னவின் குழு மேற் கொண்டு வருகின்றது.
குறித்த சந்தேக நபரை கண்ட நபர் முச்சக்கர வண்டியிலிருந்து சிறுமி
போன்ற ஒருவர் காட்டுப்பகுதிக்குள் ஓடியதாக பொலிஸாரிடம் முறைப்பாட்டில் கூறியுள்ளார். இதனால் மக்களும் பொலிஸாரும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சிறுமி துஷ்பிரயோகம்! இளைஞர் கைது! மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் குழப்ப நிலை!
Reviewed by Unknown
on
October 12, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 12, 2015
Rating:




No comments: