Mountain View Mountain View

முனைக்காடு பிரதேசத்தில் தையல் இயந்திரங்களை கையாளுதல் தொடர்பான பயிற்சி

மட்டக்களப்பு- முனைக்காடு பிரதேசத்தில் வேள்ட்விஸன் நிறுவனம் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அண்மையில் தையல் இயந்திரங்களை வழங்கினர். 





வழங்கப்பட்ட தையல் இயந்திரங்களை கையாளுதல் தொடர்பிலான பயிற்சி கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனி ஆகிய இரு தினங்களிலும் முனைக்காடு உக்டா சமூகவள நிலையத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வேள்ட்விஸன் நிறுவன உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு பயிற்சி தொடர்பான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கினர்.
முனைக்காடு பிரதேசத்தில் தையல் இயந்திரங்களை கையாளுதல் தொடர்பான பயிற்சி முனைக்காடு பிரதேசத்தில் தையல் இயந்திரங்களை கையாளுதல் தொடர்பான பயிற்சி Reviewed by Unknown on October 25, 2015 Rating: 5

No comments: