Mountain View Mountain View

திருகோணமலை – நொச்சிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து சடலம் மீட்பு

திருகோணமலை – நொச்சிக்குளம் – சாந்தபுரம் காட்டு பகுதியிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.




இவ்வாறு சடலாக மீட்கப்பட்டவர் இரண்டு மாதங்களிற்கு முன்னர் காணாமல்போன புவனேந்திரன் தேவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் தனது கணவன் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்திய நிலையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும்,

குறித்த நபரை கொலை செய்து புதைத்த இடத்தை பொலிஸாருக்கு அடையாளம் காட்டியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் ஏற்கனவே இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – நொச்சிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து சடலம் மீட்பு திருகோணமலை – நொச்சிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து சடலம் மீட்பு Reviewed by Unknown on October 25, 2015 Rating: 5

No comments: