Mountain View Mountain View

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடை விடாது தொடர்ந்து மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்ற மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24ம் திகதி காலை 8.30 மணிமுதல் 26ம் திகதி காலை 8.30 மணிவரையான 48 மணி நேரத்தில் 331.5 மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார். 



மட்டக்களப்பு மாவட்டத்தில் இடை விடாது தொடர்ந்து பெய்யும் அடை மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

 இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். வாகரை, வாழைச்சேனை, கிரான், மட்டக்களப்பு, வவுணதீவு, காத்தான்குடி, ஆரையம்பதி பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி உட்பட பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடும் மழை பெய்துள்ளது. 

மழை காரணமாக தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், தற்போது வேளான்மை ஆரம்பித்தவர்களின் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. அத்தோடு விதைக்கப்பட்ட விதைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடை விடாது தொடர்ந்து மழை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடை விடாது தொடர்ந்து  மழை  Reviewed by Unknown on October 26, 2015 Rating: 5

No comments: