Mountain View Mountain View

பரீட்சையில் சித்தி பெற்ற கோட்டைக்கல்லாறு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்!

கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில்  நடைபெற்றுள்ளது.






நேற்றைய தினம் நடைபெற்ற இந்நிகழ்வானது சங்கத்தின் தலைவர் வி.சுபேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டார்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்கள், புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் செ.மேகன், கல்முனை பெண்கள் அபிவிருத்தி நிலைய இணைப்பாளர் ஆத்மராஜா  சந்திரிக்கா, ஓய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் ப.புவனசிங்கம், சமூக சேவையாளர் வ.பிறேமஜயந்தன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு கோட்டைக்கல்லாறு பிரதேசத்திலுள்ள மூன்று பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் தரம் அடிப்படையில் மூன்று நிலைகளில் சித்தி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, ஆரையம்பதி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  இராசமணி லதாகரன், ஓய்வு நிலை அரசாங்க அதிபர் சி.சண்முகம், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் மூ.கோபாலரட்ணம் உட்பட பிரதேச பாடசாலை அதிபர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
பரீட்சையில் சித்தி பெற்ற கோட்டைக்கல்லாறு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்! பரீட்சையில் சித்தி பெற்ற கோட்டைக்கல்லாறு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்! Reviewed by Unknown on October 27, 2015 Rating: 5

No comments: