மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதானால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடும் காற்று வீசுவதுடன் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மீன்பிடி பிரதேசங்களான புதிய காத்ததன்குடி, ஏத்துக்கால், பாலமுனை, நாவலடி உட்பட பல இடங்களிலுள்ள கடலில் பரியளவிலான கொந்தளிப்பு காணப்படுகின்றது.
பாரிய அலைகள் கரையை நோக்கி வருவதனால் கடல் பேரிரைச்சலாக காணப்படுவதுடன் மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கரையிலிருந்து நீண்ட தூரத்தில் இழுத்து கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு; மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
Reviewed by Unknown
on
October 28, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 28, 2015
Rating:





No comments: