மட்டக்களப்பில் நிறைகுறைந்த பாணை விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தலா 5000 ரூபாய் தண்டப்பணம் அறவிட்டதுடன் முத்திரையிடப்படாத அளத்தல் நிறுத்தல் கருவிகளை கொண்டு வியாபராத்தில் ஈடுபட்ட இரு வர்த்தகர்களுக்கு தலா 2000 ரூபாய் வீதமும் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது 45 வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டன.
இதன்போது மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 4 வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டு இவர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் இவ்வாறு தீர்ப்பை வழங்கியதாக திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் வியாபாரம்; தண்டப்பணம் விதித்து தீர்ப்பு
Reviewed by Unknown
on
October 28, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 28, 2015
Rating:


No comments: