Mountain View Mountain View

குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட திரிபோஷா மாவில் வண்டு, புழுக்கள்: பெற்றோர் விசனம்


மட்டக்களப்பு சுகாதார பணிமனைக்கு கீழ் உள்ள மட்டிக்கழி பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை அரசாங்கத்தினால் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுவரும் திரிபோஷா மாப்பக்கற்றுக்களில் வண்டு மற்றும் புழுக்கள் காணப்பட்டதாக தெரியவருகின்றது. 
மட்டிக்கழி பிரதேசத்தில் குடம்ப நல காரியாலயத்தில் 8 மாதக்குழந்தையின் தாயார் குழந்தையை கிளினிக்கிற்காக கொண்டு சென்றவேளை பிள்ளைகளின் அளவை நிறை செய்தபின்னர் திரிபோஷ மா பைக்கற்றக்கள் வழங்கப்பட்டதாகவும், வழங்கப்பட்ட பைகளே இவ்வாறு மனித பாவனைக்கு உதவாதவை என தெரியவருகின்றது.
 குழந்தைக்கு வழங்குவதற்காக திரிபோஷ மாவை உடைத்து அரிதட்டில் அரித்த போது வண்டுகள் மற்றும் வெள்ளை நிறப்புழுக்கள் காணப்பட்டதாக இதனையடுத்து குறித்த பிள்ளையின் தாயார் வழங்கப்பட்ட திரிபோஷா மா பைக்கற்றுக்களுடன் மட்டக்களப்பு சுகாதார பணிமனைக்கு அதிகாரிகளிடம் சென்று வண்டுகள் மற்றும் புழுக்கள் மாவில் இருப்பதை காண்பித்து முறைப்பாடு செய்ததாக குறிப்பிட்டார். இதனையடுத்த குறித்த அதிகாரி நாங்கள் என் செய்வது திரிபோஷ வழங்கும் கம்பனிக்கு மறைப்பாடு தெரிவிப்பதாகவும், குறித்த குடும்பநல உத்தியோத்தர் காரியாலயத்தின் ஊடாக தெரிந்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாவை பாவிக்கவேண்டாம் என தெரிவிப்பதாகவும், முறைப்பாட்டை எழுதி தருமாறும் கோரியுள்ளனர். இதேவேளை, பழுதடைந்த மனித பாவனைக்கு உதவாத பொருள் ஒன்றை பொதுமக்கள் விற்றாலே அல்லது வழங்கினாலே அரச அதிகாரியளினால் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவார்கள், ஆனால் அந்த அரச திணைக்களமோ மனித பாவனைக்கு உதவாத அதுவும் குழந்தைகழுக்கு வழங்கப்பட்ட திரிபோஷா மாவே மனிதபாவனைக்கு உதவாதது இதற்கு யார் நடவடிக்கை எடுப்பார்கள்? குழந்தைகளுக்கு இதனால் நோய் ஏற்பட்டால் இதற்கு யார் பொறுப்பு? என பாதிக்கப்பட்ட தாய்மார்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட திரிபோஷா மாவில் வண்டு, புழுக்கள்: பெற்றோர் விசனம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட திரிபோஷா மாவில் வண்டு, புழுக்கள்: பெற்றோர் விசனம் Reviewed by Unknown on October 10, 2015 Rating: 5

No comments: