மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இந்த வருடம் வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் 233 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் த.சுகுமாரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கயைில்:
இந்த வருடம் மட்டக்களப்பு கல்வி வலயம் சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுள்ளதாகவும், 90 வீதமான மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாகவும் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தினைப்பொறுத்தவரையில் மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தில் 207 மாணவர்கள் சித்திபெற்றுள்ளதாக தெரிவித்த அவர்,
வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் 50 மாணவர்களும், கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் 39 மாணவர்களும், புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் 34 மாணவர்களும், புனித மைக்கேல் கல்லூரியில் 31 மாணவர்களும், மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 16 மாணவர்களும், கல்லடிஉப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் 08 மாணவர்களும், சிவானந்தா தேசிய பாடசாலையில் 08 மாணவர்களும், மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் 07 மாணவர்களும்,மகாஜனக்கல்லூரியில் 06 மாணவர்களும் சித்திபெற்றுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 200ற்கும் மேற்பட்ட மாணவர்கள் சித்தி
Reviewed by Unknown
on
October 10, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 10, 2015
Rating:


No comments: