ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.
நாளை காலை மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரைக்கு செல்லும் ஜனாதிபதி அங்கு நடைபெறும் சமய நிகழ்வில் பங்கு கொள்ளவுள்ளார்.
இதனையடுத்து மட்டக்களப்பு வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கும் மற்றும் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும் ஆப்பள்ளிவாசலுக்கும், மட்டக்களப்பு புனித மரியாழ் தேவலாயத்திற்கும் ஜனாதிபதி விஜயம் செய்து அங்கு நடைபெறும் பிராத்தனை மற்றும் சமய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார் என மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மைத்திரி நாளை மட்டக்களப்புக்கு விஜயம்
Reviewed by Unknown
on
October 26, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 26, 2015
Rating:


No comments: