காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையின் மற்றுமொரு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்தப்பிரசேத்திலுள்ள சுமார் ஆறு அடி கடலுக்குள் சென்றுள்ளதாக கரையோரம் பேணல் மற்றும் கரையோர முகாமைத்துவ திணைக்களத்தின் காத்தான்குடி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் கடலரிப்பு ஏற்பட்டதனால் சுமார் 25அடி அளவான கரையோரப் பிரதேசம் கடலுக்குள் சென்றுள்ளது.
அதற்கு மண்மூடைகள் அமைத்து அங்கு போடப்பட்டு கடலரிப்பு தடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அருகிலுள்ள மற்றொரு பகுதியில் மீண்டும் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த இடத்திலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஏத்துக்கால் கடற்கரையில் கடலரிப்பு; ஆபத்தை எதிர்நோக்கும் எரிபொருள் நிரப்பு நிலையம்
Reviewed by Unknown
on
October 26, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 26, 2015
Rating:




No comments: