நேற்றையதினம் சந்திவெளி பிரதேச மக்களினால் புதைப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட சடலம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நீதிமன்ற உத்தரவின் படி இருதயபுரம் பொதமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக புதைப்பதற்கு இடமின்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்த சடலத்தை கடைசியாக நிதிமன்றத்தை நாடிய பொலீசார் நீதிமன்ற உத்தரவின் பெயரில் இருதயபுரத்தில் அடக்கம் செய்தள்ளனர்.
நேற்றையதினம் சந்திவெளி பிரதேச மக்களினால் புதைப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட சடலம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நீதிமன்ற உத்தரவின் படி இருதயபுரம் பொதமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக புதைப்பதற்கு இடமின்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்த சடலத்தை கடைசியாக நீதிமன்றத்தை நாடிய பொலீசார் நீதிமன்ற உத்தரவின் பெயரில் இருதயபுரத்தில் அடக்கம் செய்துள்ளனர்.
மட்டக்களப்பு சந்திவெளிபிரதேசத்தில் இன்றையதினம் மரணமடைந்த ஒருவரின் சடலத்தை புதைப்பதற்கு பிரதேசவாசிகள் அனுமதியளிக்காததால் அங்கும் இங்குமென வேறுகிராம மயானங்களுக்கு அலைந்து திரிந்த அன்னாரின் பூதவுடலை ஏனையகிராமவாசிகளும் புதைக்க அனுமதிக்காததால் குறித்த பூதவுடல் மீண்டும் இன்று மாலை அன்னாரின் வீட்டைவந்தடைந்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது
மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் இன்றையதினம் உயிரிழந்த தேவாப்போடி வேலாச்சி (வயது-70) என்பவர் கிறிஸ்தவ மதத்தின் சபையைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால் அவருடைய பிரேதத்தை சந்திவெளி பொது மயானத்தில் புதைப்பதற்கு பிரதேசவாசிகள் அனுமதிக்கவில்லை.
இன்நிலையில் சம்பவ இடத்திற்கு பிரதேச செயலாளர், பொலீசார் உட்பட அனைவரும் வருகைதந்த நிலையில் கிராமமக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி உடலை அடக்கம்செய்ய முயற்சித்தும் அது கை கூடாதநிலையில் குறித்த சடலத்தை இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள கோரக்கல்லி மடு பொது மயானத்திற்கு எடுத்துச்சென்று அங்கு அடக்கம் செய்ய முயற்சிசெய்தபோது “இது கத்தோலிக்க மயானம் இங்கு சபையைச் சேர்ந்தவர்களை அடக்கம் செய்யமுடியாது” என அங்குள்ள மக்கள் பிரச்சினையை எழுப்ப அங்கும் குறித்த சடலத்தை அடக்கம் செய்யமுடியாமல் போக அன்னாரின் பூதவுடல் மீண்டு இன்று மாலை சந்திவெளியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் அன்னாரின் பூதவுடலை அடக்கம் செய்வதற்கு ஏறாவூர் பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் நாளைய தினம் வரை அவருடைய பூதவுடலை வீட்டில் வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் சடலம் புதைக்கப்படாமல் வீடு திரும்பியதால் குறித்த பிரதேசத்தில் பதற்றநிலை தோன்றியுள்ளதால் பொலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
இதேநேரம் ஒரே கிராமத்தில் வாழும் பொதுமகன் உயிரிழக்கும் போது அவரின் சடலத்தை மதத்தின் பெயரால் அடக்கம் செய்யவிடாது தடுப்பது எந்தவிதத்தில் நியாயமானது? அப்படியானால் அவரை அடக்கம் செய்வதற்கு வேறு வழிதான் என்ன? ஒரு கிராமத்தில் சடலம் ஒன்று அடக்கம் செய்யப்படாமல் இருந்தால் என்ன நடக்கும்? இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?
சந்திவெளியில் இறந்த நபரின் சடலம் நீதிமன்ற உத்தரவின் படி இருதயபுரத்தில் அடக்கம்!
Reviewed by Unknown
on
October 18, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 18, 2015
Rating:


No comments: