(கதிரவன்)
இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்கள் 68 பேரை பாராட்டும் நிகழ்வு சனிக்கிழமை 31.10.2015 மாலை நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி திணைக்கள பிரதம கணக்காளர் பா.கேதீஸ்வரன் முதன்மை அதிதியாகவும், ஆரம்ப கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் எஸ்.கணேசலிங்கம், புனித சூசைசயப்பர் கல்லூரி பிரதி அதிபர் ந.சங்கரதாஸ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
புலமைப்பரிசில் பரீ;சையில் 151 என்ற வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற 68 பேருக்கும் பதக்கம் அணிவிக்கப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட மட்டத்தில் முதன்நிலை பெற்ற நித்தியகுமார் சனுஜயன் என்ற மாணவனுக்கு கொரனேசன் வர்த்தக நிறுவனத்தினர் வெற்றிக் கிண்ணம் ஒன்றினையும், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் துவிச்சக்கர வண்டி ஒன்றினையும், மக்கள் வங்கி திருகோணமலை நகர கிளையினர் 25,000ரூபாவுக்கான காசோலையினையும் வழங்கி வைத்தனர்.
இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் பெற்றோர்களால் மலர்மாலை அணிவிக்கப்ப் பொன்னாடை போர்த்தப்பட்டு பாராட்டுபத்திரம் வழங்கி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்னர்.
இதன்போது கல்லூரி சாரணர் குழுவினர் இப்பரீட்சையில் தகைமை பெற்ற 11 குருளைச்சாரணர்களுக்கும் அவர்களது வெற்றியை பாராட்டி விருது வழங்கி வைத்தனர்.
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் பாராட்டு விழா
Reviewed by Unknown
on
November 01, 2015
Rating:

No comments: